வீடியோ ஸ்டோரி

"விஜய் கூறுவது எதையுமே நம்ப முடியவில்லை" - தமிழிசை கடும் சாடல்

பெரியாரையும் கும்பிடுகிறார்கள், கடவுளையும் கும்பிடுகிறார்கள் என்றும் திமுகவை போல், விஜய்யின் கட்சியும் இரட்டை வேடம் போடுகிறது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய தமிழிசை சவுந்தரராஜன், பெரியாரையும் கும்பிடுகிறார்கள், கடவுளையும் கும்பிடுகிறார்கள்.

நேரம் காலம் பார்த்துதான் எல்லாவற்றையும் செய்கிறார்கள். அதாவது திமுக எதை செய்கிறதோ அதேபோலத்தான் தம்பி விஜய்யின் கட்சியும் செய்கிறது. சுருங்கச் சொன்னால் திமுகவை போல், விஜய் கட்சியும் இரட்டை வேடம் போடுகிறது" என்றார்.