டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக 1,250க்கும் மேற்பட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக கூடியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் தமிழிசை உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னையில் 30 இடங்களில் போராட்டம் மேற்கொண்டதற்காக பாஜகவினர் நேற்று கைது செய்யப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர்