வீடியோ ஸ்டோரி

தவெக மாநாடு... திமுகவுக்கு பயம்.. - வெளிப்படையாக சொன்ன நயினார் நாகேந்திரன்

அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர்ந்த விஜயதாரணிக்கு நிச்சயம் கட்சிப்பதவி வழங்கப்பட வேண்டும் எனக் கூறினார். விஜய் மாநாடு குறித்த கேள்விக்கு, யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்கள் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றும், அனுமதி கொடுத்து விட்டால் இது போன்ற பிரச்சனைகள் வராது எனவும் தெரிவித்தார். இதையடுத்து அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.