கோவை, வடவள்ளி பகுதியில் தனியார் மழலையர் பள்ளியை திறந்து வைத்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க-வின் சித்தாந்தத்தின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் இன்று முதல் துவங்குவதாகவும், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கின்ற கோவில்கள், நீர் நிலைகள், இடுகாடுகள் அனைத்தும் எந்த விதமான வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரும் அந்த இடங்களுக்கு செல்லும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று கூறி இருப்பதாகவும் தெரிவித்தார்.
நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின்பு, காங்கிரஸ் கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் நிலையான ஆட்சியை கொடுக்க முடியாது என்ற சூழலை, அரசியல் ரீதியாக முற்றிலும் மாற்றி அமைத்தது பாரதிய ஜனதா கட்சி என்று கூறிய அவர், அதற்கு உறுதுணையாக இருந்தது வேற்றுமையில் ஒற்றுமை என்ற ஆர்.எஸ்.எஸி-ன் சித்தாந்தம் என்று குறிப்பிட்டார்.