கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 4160 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகள் அதிக அளவில் அணைக்கு வந்ததால் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீரால், அணை எதிரே உள்ள தட்டகானப்பள்ளி தரை பாலத்தை ரசாயன நுரை சூழ்ந்துள்ளது.
வீடியோ ஸ்டோரி
தரைப்படத்தை மூழ்கடித்த ரசாயன நுரை... போக்குவரத்து பாதிப்பு
கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றுக்கு திறகப்பட்ட உபரி நீரில் அதிக அளவில் நுரை பொங்கியுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.