வீடியோ ஸ்டோரி

Surrogacy Scam | வாடகைத்தாய் மோசடி... சிக்கிய சென்னை பெண்மணி

ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்காக தனது கர்ப்பப்பையை பயன்படுத்தி குழந்தை பெற்றெடுக்கும் முறையே வாடகைத் தாய் முறை. ஆனால் இந்த முறையிலும் பல்வேறு மோசடிகள் நிகழ்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாடகைத்தாய் குழந்தை பெற்றுக் கொடுப்பதற்காக விண்ணப்பித்திருந்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்பவரது மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டபோது அவர் நேரில் ஆஜரானார். 

மேலும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தனக்கு ஒரு குழந்தை தான் உள்ளது என்றும், தாயின் பெயரை மாற்றி பெரியம்மாவின் பெயரை சேர்த்து பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்ததையும் மருத்துவ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.