நெமிலி அடுத்த பனப்பாக்கத்தில் 1213 ஏக்கர் பரப்பளவில் புதியதாக தொழில் பூங்கா அமைய உள்ளது. இதில், 9ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் டாடா நிறுவனத்தின் கார்கள் தயாரிக்கும் ஆலையும், 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காலணி தொழிற்சாலையும் அமைய உள்ளது.
சிப்காட்டில் புதிதாக துவங்கப்பட உள்ள தொழில் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணி அளவில் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி ஆயிரத்து 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.