வீடியோ ஸ்டோரி

செம்மொழி பூங்கா கட்டுமான பணிகள் குறித்து முதலமைச்சர் பேச்சு!

கோவையில் நூலகம், அறிவியல் மையம் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவையில் நூலகம், அறிவியல் மையம் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை சிறை மைதானத்தில் 45 ஏக்கர் பரப்பளவில், 133 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா பணிகளை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, அனுப்பர்பாளையத்தில் அமையும் பெரியார் நூலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.