வீடியோ ஸ்டோரி

கூட்டு பாலியல் வன்கொடுமை - செல்போன்கள் தடயவியல் ஆய்வு

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் கைதான 7 கல்லூரி மாணவர்களின் செல்போன்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோவையை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு சமூக வலைதள மூலம் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் அறிமுகமானவர்கள் . அந்த மாணவர்கள் 17 வயது சிறுமியை அறைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது அந்த மாணவர்களுடன் சேர்ந்து மொத்தம் 7 பேர் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

 இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவர்களான ஜெபின் , ரக்‌சித், அபினேஸ்வரன், தீபக், யாதவ்ராஜ், முத்து நாகராஜ், நித்திஷ் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் தங்கி இருந்த அறைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் அவர்களின் அறைக்கு வந்து செல்லும் சக நண்பர்களின் அறைகளிலும் சோதனை செய்யப்பட்டது.

சிறுமி மற்றும் கைதான 7 மாணவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 8 செல்போன்களில் ஏதாவது ?. வீடியோக்கள் அழிக்கப்பட்டு உள்ளதா ? 7 பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்தார்களா ? என்பது தெரியவில்லை, அந்த செல்போன்களை ஆய்வு செய்யும் போது அதில் ஆபாச வீடியோக்கள் அதிகம் இருந்தன.

அவர்கள் வேறு யாருடனும் பலாகி தொந்தரவு செய்து உள்ளனர் என்பது உள்ளிட்ட விவரங்களை கண்டறிய பறிமுதல் செய்யப்பட்ட 8 செல்போன்களும் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆய்வில் அறிக்கை வந்த பிறகு மேல் விசாரணை நடத்தப்படும் என்றும் காவல் துறையினர் கூறி உள்ளனர்.