திருப்பதி தேவஸ்தானத்தில் இன்று முதல் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு அளவில்லா லட்டுகள் வழங்கப்படவுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் திருப்பதி மலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் தேவஸ்தான விதிப்படி தேவைக்கேற்ப லட்டுகள் வழங்க வேண்டும். அதனால் விதியை முறையாக நடைமுறைப்படுத்தி அளவில்லா லட்டுகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். அதன்படி, தலா 50 ரூபாய் விலையில் எத்தனை லட்டுகளை வேண்டும் என்றாலும் பக்தர்கள் வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
வீடியோ ஸ்டோரி
திருப்பதியில் இனி அளவில்லா லட்டுகள்... தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி தேவஸ்தானத்தில் இன்று முதல் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு அளவில்லா லட்டுகள் வழங்கப்படவுள்ளன.