வீடியோ ஸ்டோரி

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை காணாத ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர்.

அண்ணாமலையார் கோயில் நடை இன்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

வார விடுமுறை தினத்தையொட்டி சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.