வீடியோ ஸ்டோரி

அரசு பள்ளியில் ஆன்மிகம் போதிக்க வேண்டிய அவசியம் என்ன? - அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கிய சீமான்

அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது கூட தெரியாமல், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிக்கல்வித்துறையின் அனுமதி இல்லாமல், எப்படி ஒருவர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவை நடத்த முடியும் என வினவியுள்ளார். அரசுப் பள்ளியில் ஆன்மிகம் போதிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பிய சீமான், இதற்கு பள்ளிக்கல்வித்துறை தான் முழு பொறுப்பேற்க வேண்டுமென தெரிவித்தார். மகாவிஷ்ணு விவகாரத்தை பெரிதாக்கி, மக்களிடமிருந்து வேறு ஒரு பிரச்னையை மறைக்க தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை தான் இது என்றும் சீமான் விமர்சித்துள்ளார். அரசின் தவறுகளுக்குக் கடைநிலை அதிகாரிகளைப் பலியாக்குவதுதான் திராவிட மாடலா? என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.