வீடியோ ஸ்டோரி

சிறுபான்மையின மக்களுக்கு திமுக எந்த நன்மையும் செய்யவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக அரசு எருசலேம் மற்றும் ஹஜ் புனித பயணத்திற்கான வழங்கப்படும் நிதியுதவி நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்து பயணம் முடிந்த பிறகு நிதியுதவி வழங்கப்படும் என்ற முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நடைமுறையில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் எருசலேம், ஹஜ் பயணம் மேற்கொள்வது கானல் நீராகவே அமையும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்திய நடைமுறையை திமுக பின்பற்றுமாறு முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.