அரசினர் பெரியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக மருத்துவர் சஸ்பெண்ட் ஆனதை அடுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறையில் புறநோயாளிகள் பிரிவை மருத்துவர்கள் புறக்கணித்த நிலையில், நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.