வீடியோ ஸ்டோரி

"Get Out Modi என கூற உதயநிதிக்கு தைரியம் இருக்கிறதா?"

"உலக தலைவரை மதிக்க தெரியாதவர் உதயநிதி"

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லு பார்க்கலாம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி போலீஸாரால் தேடப்படும் நபரான அவர் சென்னையில் இருக்கிறார், சைக்கிளில் சென்று பள்ளி படிப்பை படித்த என்னிடம் அன்பில் மகேஷ் பந்தா காட்ட வேண்டாம் - கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை ஆவேச பேச்சு.

தமிழகத்திற்கு மோடி வந்தால் முதலில் "Go Back Modi" என்று கூறினோம். இனிமேல் "Get Out Modi" என்று கூறுவோம் என உதயநிதி பேசியிருக்கிறார். நீ சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லு பார்க்கலாம். என்னுடைய தாத்தா, அப்பா முதல்வர் என்று சொல்லிக் கொண்டு உலக தலைவரை மதிக்காத கத்துக்குட்டி உதயநிதி. சூரியன் உதித்த பின்னர் 11 மணிக்கு வெளியே வரும் உனக்கு இவ்வளவு திமிர் இருந்தால், மக்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.