செல்போனில் உரையாடல் நடத்தியுள்ள நபர் ஞானசேகரன் தானா என்பதனை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க ஞானசேகரனை விதவிதமாக பேசச்சொல்லி குரல் மாதிரி பதிவு செய்யப்பட்டுள்ளது, ஒவ்வொரு குரலிலும் ஒவ்வொரு ஒலி மற்றும் உச்சரிப்பு வேறுபாடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 மணி நேரமாக குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு ஞானசேகரனை சைதாப்பேடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.