வீடியோ ஸ்டோரி

ஆளுநர் தேவையா அன்று.. ஆளுநருடன் சந்திப்பு இன்று

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை கேள்விக்குறியாக்கி இருப்பதாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தவெக தலைவர் விஜய்யும் தனது கண்டனங்களை பதிவு செய்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல், கூடவே வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நடப்பதாக கடிதம் ஒன்றை வெளியிட்டு விஜய் பரபரப்பை ஏற்படுத்தினார்.