வீடியோ ஸ்டோரி

நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து.. அதிகாரபூர்வமாக வெளிவந்த அறிவிப்பு

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், “நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைகளுக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவட்து என முடிவு எடுத்துள்ளேன்; இது  என்னை  சார்ந்தவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட எனது சொந்த முடிவே. இந்த நேரத்தில் எனது தனியுரிமைகளுக்கும், எனக்கு நெருக்கமானர்களின்  தனியுரிமைகளுக்கும்   மதிப்பளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நான் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்