கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 108 வயதான பாப்பம்மாள். இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கி பலருக்கும் முன்னுதாராணமாக இருந்த இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. அத்துடன் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாப்பம்மாள் நேற்று காலமானார்.
இந்நிலையில், இயற்கை விவசாயி பாப்பம்மாள் மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன், உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.