வீடியோ ஸ்டோரி

போதையில் வம்பிழுத்த திமுக வழக்கறிஞர்... போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்

வண்ணாரப் பேட்டையில் போதையில் ரகளை செய்த திமுக வழக்கறிஞரைக் கைது செய்ய வலியுறுத்தி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வண்ணாரப் பேட்டையில் போதையில் ரகளை செய்த திமுக வழக்கறிஞரைக் கைது செய்ய வலியுறுத்தி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காணிக்கை நாதன் என்பவர் திமுக வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார். அவர், சென்னை வண்ணாரப்பேட்டை வியாபார பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பேரிகார்டை போதையில் அகற்றியதாக தெரிகிறது. இதனை தட்டிக்கேட்ட வியாபாரிகளுடன் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரைக் கைது செய்யக் கோரி துணிக்கடை வியாபாரிகள் சாலை மறியல் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.