வீடியோ ஸ்டோரி

டிசம்பருக்கு முன்பே வந்த சோகம்.. பீதியை கிளப்பிய வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்கும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்த முறை வடதமிழக மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், தென்தமிழக மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறினார்.