தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் ஒவ்வொரு காலாண்டு தேர்வையும் பொதுத்தேர்வு போல் எண்ணி எழுத வேண்டும் என்றார்.
அவ்வாறு எழுதும்போது பொதுத்தேர்வை ஒரு கிளாஸ் டெஸ்ட் போல பயமின்றி எழுத முடியும் என்றார். மேலும் 10,11,12 வகுப்பின் போது, 3 ஆண்டுகளும் உங்களுக்கான ஆண்டாக எண்ணி படிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.