வீடியோ ஸ்டோரி

Anna University Semester Examination Fees : அண்ணா பல்கலைக்கழக 'செமஸ்டர்' தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!

Minister Ponmudi on Anna University Semester Examination Fees : ''அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள் அதிகம் படிப்பதால் தேர்வு கட்டணத்தை குறைக்கக் கூறி மாணவர்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது'' என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Minister Ponmudi on Anna University Semester Examination Fees : அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு  நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளுடைய தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதாக சிண்டிகேட் அவையில் முடிவு எடுக்கப்பட்டது. 

இது மாணவர்களை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தேர்வு கட்டண உயர்வு தற்போது நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த ஆண்டும், வருகிற ஆண்டுகளிலும் தேர்வு கட்டணம் அதிகரிக்காது. தற்போதுள்ள தேர்வு கட்டணமே இனி நடைமுறையில் இருக்கும். 

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள் அதிகம் படிப்பதால் தேர்வு கட்டணத்தை குறைக்கக் கூறி மாணவர்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது. கட்டண உயர்வு குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் செயலாளர்களுடன் ஆலோசித்து சிண்டிகேட்டில் முடிவு எடுத்து இருந்தாலும் இனி கட்டணம் உயர்த்தப்படாது. 

தன்னாட்சி மற்றும் தன்னாட்சி இல்லாத கல்லூரிகளிலும் தற்போது செமஸ்டர் தேர்வுகள் எவ்வளவு வசூலிக்கப்படுகிறதோ அதையே வசூலிக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்படும்'' என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.