வீடியோ ஸ்டோரி

"அவதூறு பரப்புவதே இபிஎஸ்-இன் வாடிக்கை" தங்கம் தென்னரசு விமர்சனம்

100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாட்டு மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டிய எடப்பாடி பழனிசாமி, தனது குரலை அவதூறு பரப்ப மட்டுமே பயன்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது.

எதற்கெடுத்தாலும் செய்தித்தாளிலே படித்தேன், டிவியைப் பார்த்து தெரிந்து கொண்டேன் எனக் கூறும் எதிர்க்கட்சித் தலைவருக்கு, மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது பற்றித் தெரியாதா?