வீடியோ ஸ்டோரி

Samsung தொழிலாளர்கள் போராட்டம் : முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி முடிவு

சாம்சங் போராட்டத்தில் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட 3 அமைச்சர்கள் தலையிட்டு தீர்வுகாண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சாம்சங் நிறுவனம், அங்கு தொழிற்சங்கம் அனுமதி அளித்த போதும், காஞ்சிபுரத்தில் உள்ள  நிறுவனத்தில் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க மறுக்கிறது. தொடர்ந்து ஊதியஉயர்வு குறித்துப் பேசவும் நிர்வாகம் முன்வரவில்லை. இதனை கண்டித்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணேசன் ஆகிய அமைச்சர்கள் இணைந்து இந்த பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து 3 அமைச்சர்களும், வரும் 7ம் தேதி தொழிலாளர் - நிறுவனத்தினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.