வீடியோ ஸ்டோரி

"என்னோட Role Model நம்மளோட CM .."செந்தில் பாலாஜி பேச பேச அள்ளிய கிளாப்ஸ்

தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு 50 ஆண்டு கால உழைப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் எனது ரோல் மாடல் என கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.

தமிழக முதல்வரின் 50 ஆண்டுகால உழைப்பை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அவர் குறித்து சமூக வலைத்தளங்களிலும், பொது வெளியிலும் பல்வேறு விமர்சனங்கள் வந்திருந்தாலும்,
அவற்றையெல்லாம் புரந்தள்ளி விட்டு உழைப்பு, உழைப்பு என்றே செயல்பட்டு இருக்கிறார். தமிழகத்தில் முதல்வர் கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களை பல்வேறு மாநில அரசுகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்து வெற்றி பெறும் நோக்கோடு செயல்படும் அளவுக்கு நமது திட்டங்கள் உள்ளன.