திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போன நிலையில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள். அப்போது வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான், என்பவர்தான் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 38 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். திருட்டுக்கு உதவி செய்த தினேஷ், சண்முக சுந்தரம் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
வீடியோ ஸ்டோரி
ஒன்றல்ல; இரண்டல்ல.. 38 பைக்குகள்.. திருப்பூரை மிரட்டிய 'பலே' பைக் திருடன்!
திருப்பூரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 38 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.