வீடியோ ஸ்டோரி

மாணவர்கள் மீது பாய்ந்த புகார்! அதிகாலையிலேயே வேட்டையில் இறங்கிய போலீசார்

கோவை மாநகரில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளில், காவல்துறை அதிரடி சோதனை மேற்கொண்டனர்

கோவை சரவணம்பட்டி, பீளமேடு, ஈச்சனாரி, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில்  ஏராளமான கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் கல்வி பயிலும் மாணவர்கள், தனியாக வீடு பிடித்து தங்கி உள்ளனர்.

இரவு நேரங்களில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாததால் பைக்கில் ஊர் சுற்றுவது, போதைப் பொருளுக்கு அடிமையாவது, குழு சண்டை இடுவது என மாணவர்கள் அட்டூழியம் தொடர்ந்தது. கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இன்று காலை 5 மணி முதல் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டனர்.