டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா கடந்த 9ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார். இந்நிலையில், இந்தியாவின் மிக முக்கியமான தொண்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த முடிவு அறக்கட்டளையின் குழுவால் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நோயல் டாடா மறைந்த ரத்தன் டாடாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.