அப்போது, அந்த வழியாக, 'மாருதி ஈகோ' காரில் வந்த மர்ம நபர்கள், விஜய்ஸ்ரீயை காரில் கடத்திச்சென்றனர்.இதுகுறித்து தகவலை, விஜய்ஸ்ரீயின் தோழி, உறவினர்களுக்கு தெரித்துள்ளார். இதையடுத்து, பேளுக்குறிச்சி போலீசில் தகவல் தெரிவித்தனர். போலீசர் மாணவியின் தோழியிடம் விசாரணை நடத்தினர்.
மாணவியை விரைவாக மீட்டு தரக்கோரி உறவினர்கள், நாமக்கல் - ராசிபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.