வீடியோ ஸ்டோரி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது. நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த புகாரில் தனிப்படை போலீசார் நடவடிக்கை.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய ரவுடியான புதூர் அப்புவை தனிப்படை போலீசார் டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை  செய்யப்பட்ட வழக்கில் இதுவரை முன்னாள் பா.ஜ.க. நிர்வாகி, அஞ்சலை, முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன், ரவுடி நாகேந்திரன் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ரவுடி சம்போ செந்தில், ரவுடி சீசிங் ராஜா, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை தனிப்படையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில், கொலை வழக்கில் நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த பிரபல ரவுடி புதூர் அப்புவை தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில் டெல்லியில் பதுங்கி இருந்தவரை கைது செய்துள்ளனர்.