அமெரிக்காவின் சிகாகோவில் மேலும் 3 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் எலக்ட்ரிக் நிறுவன உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மேலும் விஷய் பிரிஷிஷன் நிறுவனத்துடன் ரூ.100 கோடிக்கும், விஸ்டியன் நிறுவனத்துடன் ரூ.250 கோடிக்கும் முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
வீடியோ ஸ்டோரி
முதலமைச்சர் முன்னிலையில் 3 முக்கிய நிறுவனங்களுடன் ரூ.850 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது