சென்னை கடற்கரைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில், கழிவுகளை அகற்றும் பணி மும்முரம்.
பட்டினப்பாக்கம் கடற்கரையில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சென்னை பட்டினப்பாக்கத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
1,100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கிரேன் மூலம் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்டது.
சிதிலமடைந்த விநாயகர் சிலைகள், மரக்கட்டைகள், இரும்பு உலோகங்கள் ஆகியவை ஜேசிபி உதவியுடன் அகற்றப்பட்டு வருகிறது.