நேற்றைய தினம் (அக். 16) சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிகவும் லேசான மழை பெய்ததோடு சில இடங்களில் மழை பெய்யவே இல்லை. இதையடுத்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த 'ரெட் அலர்ட்' விலக்கி கொள்ளப்பட்டது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதால் இன்று (அக். 17)) சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் அறிவித்துள்ளார். இதே போல் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் எனவும் புதுச்சேரியிலும் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.