வீடியோ ஸ்டோரி

"எதிரிகள் வடிவம் மாறி இருக்கலாம்.." அனல் தெறிக்க பேசிய முதலமைச்சர்

எதிரிகளின் வடிவம் மாறி இருக்கலாம், ஆனால் 75 ஆண்டுகளாக நாம் மாறவில்லை, நமது போராட்டக் களம் மாறவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எழுதிய நூல்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துரை முருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ், கவிஞர் வைரமுத்து, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிரிகளின் வடிவம் வேண்டுமானால் மாறி இருக்கலாம், ஆனால் 75 ஆண்டுகளாக நாம் மாறவில்லை, நமது போராட்டக் களம் மாறவில்லை என்று கூறியுள்ளார்.