வீடியோ ஸ்டோரி

திரைத்துறை குடும்பம் என்பதால் குறி வைக்கப்படுகிறோம்... பாடகர் மனோவின் மனைவி ஜமிலா கண்ணீர்

தவறு எங்கள் பக்கம் இல்லை திரைத்துறை குடும்பம் என்பதால் குறி வைக்கப்படுகிறோம் என பாடகர் மனோவின் மனைவி ஜமீலா கண்ணீர் மல்க தெரிவித்தார். 

பாடகர் மனோவின் 2 மகன்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து தாக்கியதில் 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரை தாக்கியதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் மனோவின் இரண்டு மகன்களும் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் மனோவின் மனைவி ஜமிலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, என் மீதும், என் மகன்கள் மீதும் தாக்குதல் நடந்தது. எனக்கும் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. தவறு எங்கள் பக்கம் இல்லை, நான்தான் போலீசுக்கு போன் செய்தேன். திரைத்துறை குடும்பம் என்பதால் குறி வைக்கப்படுகிறோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.