இலங்கை கடற்படையினர் ஜனவரி 24, மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை கடற்படை சார்பில் ஜனவரி 24 மற்றும் 27-ம் தேதிகளில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெறுவதால், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.