வீடியோ ஸ்டோரி

Kida Virunthu : 100 கிடா வெட்டி கறி விருந்து.. கோயில் திருவிழாவில் ஒரு பிடிபிடித்த ஆண்கள்!

Dindigul Kida Virunthu : இரவு முழுவதும் மணக்க மணக்க கறி விருந்துடன் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத கோயில் திருவிழா திண்டுக்கல்லில் நடந்துள்ளது.

Dindigul Kida Virunthu : ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையம் மருதாநதி அணை பகுதியில் அமைந்துள்ள சடையாண்டி கோயில்  திருவிழா புதன்கிழமை இரவு வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அய்யம்பாளையம் பெரிய முத்தாலம்மன் கோயிலில் இருந்து பெட்டி எடுத்துச் செல்லப்பட்டு, சடையாண்டி கோயிலில் இரவு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, பூஜையின் போது பக்தர்களால் நேர்த்திக் கடனாக கொடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டன.

பின்னர் அந்த ஆடுகளின் இறைச்சி மணக்க மணக்க சமைக்கப்பட்டது. நூற்றூக்கும் மேற்பட்ட கிலோ அரிசி சாதமும் தயாரிக்கப்பட்டு இரவு முழுவதும் மணக்க மணக்க கறிவிருந்து(Kida Virunthu) நடைபெற்றது.