திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 450-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஞாயிறு விடுமுறை முடிந்து இன்று வழக்கம்போல் பள்ளியை திறந்தனர். அங்கே மர்ம நபர்கள் பள்ளியின் நுழைவு வாயிலில் வெட்டப்பட்ட தலைமுடியை வீசிச் சென்றுள்ளதை கண்டு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உள்ளே சென்று பார்த்த பொழுது அங்கு பள்ளி தலைமை ஆசிரியர் கதவில் பள்ளி மாணவிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படுகின்ற இலவச காலணியை தொங்கவிடப்பட்டிருந்தது. உடனடியாக இதுபோன்ற செயல்களை செய்த மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தமிழக அரசுக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் கோரிக்கை விடுத்தனர்.
வீடியோ ஸ்டோரி
#JUSTIN: அரசு பள்ளியில் மர்ம நபர்கள் அட்டகாசம்.. மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி
வார விடுமுறை நாட்களில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்