நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம்.
80 கி.மீ வேகத்தில் செல்லும் பேருந்தில், படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்தனர்.
பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையிலும் பேருந்தை ஓட்டுநர் அதிவேகமாக இயக்கிச் சென்றதாக புகார்.
அதிவேகமாக மற்றும் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.