செம்மரக்கடத்தல் வழக்கில் தொடர்பு கொண்ட வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேலுவை பணிநீக்கம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு டிஎஸ்பி தங்கவேலு, ஆம்பூர் அருகே உள்ள பாலூர் பகுதியில் பாமக பிரமுகருக்கு சொந்தமான இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 7 டன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தார். ஆனால் அந்த செம்மரக் கட்டைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் விற்பனை செய்ய முயன்றதால் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வீடியோ ஸ்டோரி
தமிழ்நாடு போலீஸ் டிஎஸ்பி அதிரடி பணிநீக்கம்.. என்ன காரணம்?
செம்மரக்கடத்தல் வழக்கில் தமிழ்நாடு போலீஸ் டிஎஸ்பி தங்கவேலு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்