வீடியோ ஸ்டோரி

வார்னிங் கொடுத்த வானிலை மையம்.. இத்தனை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்.

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் மழை பெய்யக்கூடும்.