வீடியோ ஸ்டோரி

கொடி கம்பத்தில் பெயரில்லை... தற்கொலைக்கு முயன்ற த.வெ.க நிர்வாகி

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடி கம்பத்தில் பெயரில்லை என்ற விரக்தியில், த.வெ.க நிர்வாகி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வத்தலக்குண்டு அருகே எழில் நகரைச் சேர்ந்தவர் அபினேஷ். இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் வத்தலக்குண்டு ஒன்றிய தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வத்தலகுண்டு பேருந்து நிலையம் முன்பு புதிதாக அமைக்கப்பட்ட கொடி மேடை கல்வெட்டில் வத்தலக்குண்டு ஒன்றியத்திற்கு புதிய நிர்வாகிகள் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அபினேஷ் உள்ளிட்ட தவெக கட்சியினர் 30க்கும் மேற்பட்டோர் கொடியேற்று விழா தினத்தன்று புதியவர்களுக்கு பதவி வழங்கிய மாவட்ட தலைவர் தேவாவை கண்டித்து போராட்டம் நடத்தினர்.