வீடியோ ஸ்டோரி

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப திருவிழா கோலாகலம்

மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி

திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவில் 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் ஆண்டுதோறும், தைப்பூசத்தையொட்டி, ஆதிசேஷ தீர்த்த குளத்தில், உற்சவர் சந்திர சேகரர் – திரிபுரசுந்தரி அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். 

இந்த தெப்ப உற்சவத்தில் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பக்தர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வரிசைப்படுத்தி மிகவும் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது