வீடியோ ஸ்டோரி

மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் வாழ்த்து

பாராலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.