ஆன்லைனில் போதை மருந்து விற்பன செய்யும் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ எழுதிய கடிதத்தில், அண்மைகாலமாக இ-பார்மசிகளை பயன்படுத்தி அண்டை மாநிலங்களில் இருந்து போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக புகார் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.