வீடியோ ஸ்டோரி

Diwali Shopping: ஆரம்பிக்கலாங்களா? நெல்லையில் புத்தாடை எடுக்க குவிந்த மக்கள்

தீபாவளிக்கு புத்தாடை எடுக்கவும் பொருட்கள் வாங்கவும் குவிந்த மக்களால், நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வாங்கவும், பொருட்கள் வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி நெல்லை மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். இனிப்புகள், புத்தாடைகள், பட்டாசுகளை மக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக மார்க்கெட் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் வைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.