வீடியோ ஸ்டோரி

பெற்றோர்களை தவிர மற்றவர்களின் கால்களில் விழக்கூடாது - புஸ்ஸி ஆனந்த்

எதிர்பார்ப்பில்லாமல் உழைப்பவர்களுக்கு கட்சியில் அங்கீகாரம் கிடைக்கும் எனவும், பெற்றோர்களை தவிர மற்றவர்களின் கால்களில் விழக்கூடாது எனவும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.     

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தவெக முதல் மாநில மாநாட்டு குழுக்கள் மற்றும் தற்காலிக தொகுதிப் பொறுப்பாளர்காளுக்கான அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், எதிர்பார்ப்பில்லாமல் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் எனவும், பெற்றோர்களை தவிர மற்றவர்களின் கால்களில் விழக்கூடாது எனவும் தெரிவித்தார்.