வீடியோ ஸ்டோரி

தவெக மாநாடு... காவல்துறை எழுப்பிய கேள்விக்கு நாளைக்குள் பதில்

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடத்த அனுமதிக்க கோரியது தொடர்பான காவல்துறையினரின் கேள்விகளுக்கு நாளைக்குள் அக்கட்சி நிர்வாகிகள் பதிலளிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

விக்கிரவாண்டியில் வரும் 23ம் தேதி மாநாடு நடத்த அனுமதிகோரி விழுப்புரம் காவல் நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனு மீது காவல்துறை சார்பில் 21 கேள்விகள் கேட்கப்பட்டது.  இந்த நிலையில் காவல்துறையினரின் கேள்விகள் தொடர்பாக வழக்கறிஞர்களுடன் தவெக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், நாளைக்குள் கேள்விகளுக்கு அக்கட்சி நிர்வாகிகள் பதில் அளிப்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.