வீடியோ ஸ்டோரி

விசிக மது ஒழிப்பு மாநாடு... நிறைவேற்றப்பட்ட 13 தீர்மானங்கள்

விசிக மாநாட்டில் 13 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினார் தொல். திருமாவளவன்.

  1. அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 47 இல் கூறியுள்ளவாறு மது விலக்கைத் தேசியக் கொள்கையாக வரையறுக்கவும் சட்டமியற்றவும் வேண்டும்!
  2.  மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்கிட வேண்டும்!
  3. மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும்!
  4. மதுவிலக்கு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும்!
  5. தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக, மதுபானக் கடைகளை மூடுவதற்குரிய கால அட்டவணையை அரசு அறிவித்திட வேண்டும்!
  6. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்
  7. மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பரப்பியக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்!
  8. குடி நோயாளிகளுக்கும் போதை அடிமை நோயாளிகளுக்கும் நச்சு நீக்க சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் அவற்றுக்கான மையங்களை உருவாக்க வேண்டும்!
  9. மது மற்றும் போதை அடிமை நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திட வேண்டும்!
  10. 'டாஸ்மாக்' என்னும் அரசு நிறுவனத்தின் மது வணிகத் தொழிலாளர்களுக்கு 'மாற்று வேலை' வழங்கிட வேண்டும்!
  11. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!
  12. மதுவிலக்குப் பரப்பியக்கத்தில் அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும்!
  13. அய்யா வைகுண்டரின் பிறந்தநாளிலும் மதுக்கடைகளை மூட வேண்டும்